ஓடும் ரயிலில் அபாய சங்கிலியை இழுத்தால் ரூ.1000 அபராதம், சிறை

10266பார்த்தது
ஓடும் ரயிலில் அபாய சங்கிலியை இழுத்தால் ரூ.1000 அபராதம், சிறை
ஓடும் ரயிலில் இருந்து மொபைல் போன் தவறி விழுந்தால், ரயிலை நிறுத்த அபாய சங்கிலியை பயன்படுத்தலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், அப்படி செய்வது ரயில்வே விதிகளின்படி சட்டவிரோதம் ஆகும். மொபைல் விழுந்த இடத்தை சரியாக குறித்து, பயணிகள் 139 அல்லது 182 என்ற ரயில்வே உதவி எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதை மீறி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினால், ரூ.1,000 அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி