கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் குடும்பம் இல்லாமல் தனியாக வசிக்கும் பெண்கள் பயனாளியாக முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது. அதற்குப் பதில் தற்போது கிடைத்துள்ளது. தனியாக வசிக்கும் பெண்கள், ரேஷன் கார்டு பெற்றிருக்க வேண்டும். இதுவரை பெறவில்லை என்றால் தனியாக வசிக்கிறேன் என்பதற்கான மனு கொடுத்து ரேஷன் கார்டு பெறலாம். அதன் பின்னர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.