மகளிர் உரிமைத் தொகை அடுத்த 3 மாதங்களுக்கும் சேர்த்து இன்று (பிப்., 13) வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளதால் ரூ.1,000 வழங்க தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், முன்கூட்டியே பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 3 மாதங்களுக்கு தொகை டெபாசிட் செய்யப்படாது.