டிட்வா புயல் கனமழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இன்று (ஜனவரி 15) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக 1.39 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.