பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.17 லட்சம் வழிப்பறி

18பார்த்தது
பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.17 லட்சம் வழிப்பறி
டெல்லி காந்தி நகர் சந்தையில் துப்பாக்கி முனையில் ரூ.17 லட்சம் வழிப்பறி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிறுவன ஊழியரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஹெல்மெட் அணிந்த இரு மர்மநபர்கள், பணம் இருந்த பையைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி