தமிழக வேளாண் பட்ஜெட் 2026-ல், மாநிலத்தின் பாரம்பரிய கால்நடை இனங்களை அழியாமல் பாதுகாத்து மறுமலர்ச்சி அடைய செய்ய ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் காங்கேயம், தோடா, கருப்பூர் உள்ளிட்ட நாட்டினக் கால்நடைகளை பராமரித்து வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பராமரிப்பு நிதியாக இந்த தொகை வழங்கப்பட இருக்கிறது. பாரம்பரிய கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதுடன், கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.