தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிலமற்ற ஏழை விவசாய கூலிகளும் பயனாளிகளாக சேரலாம். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இயற்கை மரணம், ஈமச்சடங்கு, விபத்து, உடல் உறுப்பு இழப்பு, கல்வி, திருமணம் உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மரணத்திற்கு ரூ.40,000 வரை, விபத்துக்கு ரூ.2 லட்சம் வரை நிவாரணம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு https://www.landreforms.tn.gov.in/UPT.html