அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல்

3705பார்த்தது
அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல்
நெல்லை கேடிசி நகர் பகுதியில் நாங்குநேரி தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி முத்துவின் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி