"குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக அரசு இன்று மகளிர் தொகை ரூ.5,000 டெபாசிட் செய்துள்ளதோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்து ரூ.2,000 வழங்குவோம் என அறிவித்துள்ளது. இதனை விமர்சித்துள்ள இபிஎஸ், 'தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் 3 மாதங்களுக்குள் அதிமுக ஆட்சி அமையும். அதன் பிறகு மாதம் ரூ.2000 என்று நான் அளித்த வாக்குறுதியானது அமல்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.