மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், 'பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 இன்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #DravidianModel 2.0-இல் ரூ.1,000 உரிமைத்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த மு.க.ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி' என குறிப்பிட்டுள்ளார்.