புதுச்சேரியில் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை இன்று (பிப்., 05) முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிர் இந்தி திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் அரசுக்கு ரூ.17.50 கோடி கூடுதல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.