மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தவெக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இன்று (மே.16) சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நிதிநிலை பட்ஜெட்டை முடித்த பிறகு தான் வாக்குறுதி கொடுத்த பெண்களுக்கு மாதம் ரூ.2,500யை கொடுக்க முடியும். முதலமைச்சர் விஜய், அதற்கான நிதி ஆதாரங்களை சரி செய்து நிதிநிலை பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு தான் செய்ய முடியும். அதை வெறுமனே அரசாணை மூலம் நிறைவேற்ற முடியாது” என்றார்.