ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே சுரங்கத் துறை துணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் தேபப்ரதா மொஹந்தி. இவரது அடுக்குமாடி குடியிருப்பு, அவரது பெற்றோர் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். இதில், அவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ.4 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்துள்ளது. அதனை அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, ரூ.30,000 லஞ்சம் பெற்றதாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.