மலேசிய விமானத்தில் ரூ.5 கோடி கஞ்சா கடத்தல்

5901பார்த்தது
மலேசிய விமானத்தில் ரூ.5 கோடி கஞ்சா கடத்தல்
திருச்சி விமான நிலையத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சாவை கடத்தி வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது, சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரிடம் இருந்து கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி