தேசிய அளவில் கிரியேட்டிவான Mascot (சின்னம்) உருவாக்கும் போட்டி ஒன்றை ஆதார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.30,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.20,000 வழங்கப்படும். மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆதார் அமைப்பின் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலும் இந்த Mascot-ஐ உருவாக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் தாங்கள் உருவாக்கிய Mascot-ஐ அக்.31-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.