உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18-60 வயதுடைய உலமாக்கள் புதிய இருசக்கர வாகனம் வாங்க ரூ.50,000 மானியம் வழங்கும் திட்டம் தவெக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவம் பெற்று, ஜூன் 30, 2026-க்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.