மக்களை தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு ரூ.5,500 சம்பளம் விடுவிப்பு

3பார்த்தது
மக்களை தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு ரூ.5,500 சம்பளம் விடுவிப்பு
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் 13,225 ஊழியர்களுக்கான சம்பள தொகையை அரசு விடுவித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக நிலுவையில் இருந்த சம்பளமாக மொத்தம் ரூ.5.01 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.5,500 சம்பளமாக வங்கிக்கணக்கில் வழங்கப்படுகிறது. 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் வீடு வீடாக சென்று மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி