அமெரிக்கத் தூதர்களின் வருகையை முன்னிட்டு, உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதல்களை இன்று (செப்.5) நள்ளிரவு முதல் 3 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரும் போரை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க தூதர்கள் ரஷ்யா சென்று அதிபர் புதினை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இச்சந்திப்பின் மூலம் ரஷ்ய-உக்ரைன் போருக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.