ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உறுதி செய்துள்ளன. அவரது உடலில் ‘எபிபாட்டடின்’ என்ற விஷம் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஆர்க்டிக் சிறையில் இருந்தபோது அவர் மயங்கி உயிரிழந்தார். அவரது மனைவி யூலியா நவால்னயா, இந்த மரணத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.