அதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வர வேண்டும் என வேண்டி, கோவையில் அதிமுக தொண்டர் செந்தில்குமார் என்பவர் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினார். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து மோதல் முற்றியுள்ள நிலையில், அவர் வழங்கிய பொறுப்பை வேலுமணி ஏற்க மறுத்து வருகிறார். இந்த சூழலில் இபிஎஸ்க்கு எதிராக ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் மீண்டும் அதிமுகவில் மோதல் வெடித்துள்ளது.