சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காகத் திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 24-ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு நாளைக்கு 5,000 பக்தர்களுக்கு மட்டுமே 'ஸ்பாட் புக்கிங்' மூலம் அனுமதி வழங்கப்படும் என்றும், இந்த முன்பதிவு நிலக்கல், வண்டிப்பெரியார் ஆகிய பகுதிகளில் மட்டும் நடைபெறும் என்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.