சபரிமலையில் துபார பாலகர் சிலைக்கு முலாம் பூச பெறப்பட்ட தங்கம் திருட்டு என புகார் எழுந்தது. இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னி கிருஷ்ணன் போட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் தனக்கு ஜாமின் கோரி உன்னிகிருஷ்ணன் மனு அளித்திருந்தார். தொடர்ந்து, சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னி கிருஷ்ணன் போட்டிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.