சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் வரும் ஏப்.7-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய வழக்கை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட பிரத்யேக அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்.22-ம் தேதி வரை தொடர்ச்சியாக விசாரணை நடைபெறவுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 7 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த விசாரணை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.