சபரிமலை கோவிலில் உள்ள காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரான என். வாசு இன்று (நவ.11) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தலைவராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்னதாக, இரண்டு முறை இந்த போர்டின் ஆணையகராகவும் பணியாற்றியுள்ளார்.