சபரிமலை கோயில் நடை நவ., 16ல் திறப்பு

24பார்த்தது
சபரிமலை கோயில் நடை நவ., 16ல் திறப்பு
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறும். டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். மாசி மாத பூஜை பிப்., 12 முதல் 17 வரையிலும், பங்குனி மாத பூஜை மார்ச் 14 முதல் 19 வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.