கடந்த முறை சென்னையின் 16 தொகுதிகளையும் வென்ற திமுகவிற்கு, இம்முறை த.வெ.க சார்பில் விஜய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிடுவது கடும் சவாலாக அமைந்துள்ளது. வாக்குகள் சிதறி அதிமுக வெல்வதைத் தடுக்க, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நேரடியாகக் களமிறங்கியுள்ளார். அவர் அனைத்துத் தொகுதிகளையும் கண்காணித்து, புதிய வியூகங்களை வகுத்து வருவதோடு, அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்தித் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.