சாய் அபியங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடிய ‘பவழமல்லி’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடலில் வரும் 'சித்தப்பு சிக்குன்னு சிக்குன்னு' என்ற வரிகள் சமூக ஊடகங்களில் இப்போதுவரை ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், தற்போது ஒரு இப்பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது. 2026-ம் ஆண்டில், இந்தியாவில் மிக அதிவேகமாக வெறும் 91 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து இப்பாடல் வரலாற்று சாதனை படைத்துள்ளது.