டாஸ்மாக் ஊழியர்களிடம் அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக ஊதியத்தை 25% உயர்த்தியதாக டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், அரசின் இதர நிறுவனங்களில் 23 ஆண்டு பணி என்பது பணி மூப்பு அடிப்படையில்
பதவி உயர்வு, சம்பளத்தில் உயர்வு, இதர பணப்பயன்கள் பெற்று வருவதை கருத்தில் கொள்ளாமல், முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே நவீன கொத்தடிமை முறையை இந்த அரசும் தொடர்வது ஏற்புடையதல்ல என கூறப்பட்டுள்ளது.