தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஆவின் இல்லத்தில் பல்வேறு நலத்திட்டங்களை இன்று (ஆகஸ்ட் 22) தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர், விரைவில் ஆவினில் மூலிகைப்பால் விற்பனை தொடங்கப்படும் என்று கூறினார். அஸ்வகந்தா, மஞ்சள், மிளகு போன்றவற்றை பாலுடன் கலந்தும், சுக்கு மல்லி காபி போன்ற பிற சில வகைகளையும் அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.