மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மது விற்பனை - அரசுக்கு நெருக்கடி

1பார்த்தது
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மது விற்பனை - அரசுக்கு நெருக்கடி
தமிழகத்தில் 863 எஃப்எல்-2 உரிமங்கள் (மனமகிழ் மன்றங்கள்) வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் பாரம்பரிய கிளப்கள் தவிர, மற்றவை தனியார் பார்கள் போல இயங்குவதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மனமகிழ் மன்றங்கள் மூடப்படாதது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, அபராதம் விதிப்பதா அல்லது உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதா என்பது குறித்து ஒரு மாதத்தில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி