
பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி
பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். தூத்துக்குடியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், நேற்று (பிப்., 06) பள்ளி வாகனத்தில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். வாகனம் திருநெல்வேலி வள்ளியூர் புறவழிச்சாலை பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்த ஒரு மாணவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த மாணவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.






























