
ஆத்தூர் அரசு மதுபான கடை மூடல் பெண்கள் கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரயிலடி தெருவில் இருந்த அரசு டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கும் சாலையோர வியாபாரிகளுக்கும் இடையூறாக இருந்ததால், வியாபாரிகள் பல போராட்டங்கள் நடத்தினர். தமிழக அரசு பேருந்து நிலையம், பள்ளிக்கூடம், கோவில் அருகே உள்ள மதுபான கடைகளை உடனடியாக மூடப்படும் என அறிவித்ததை அடுத்து, இந்தக் கடை மூடப்பட்டது. இதனால் பெண்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



































