சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியம்மாள் என்ற மூதாட்டி அரசு நகர பேருந்தில் திம்மநாயக்கன்பட்டியில் இருந்து தளவாய்பட்டி நோக்கி சென்றபோது 10 சவரன் நகை கொள்ளை போனதாக கூறப்படுகிறது. மூதாட்டியின் அருகில் இருந்த திருநங்கைகள் நகையை கழட்டி வைக்கச் சொல்லி பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.