சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கக் கோரியும், தலை குறைவாக இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டுமனை வழங்கக் கோரியும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கலைந்து செல்ல மறுத்ததால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.