ஆத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நந்தகுமார் (30) என்பவர், 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்ட சிறுமி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.