ஆத்தூர்: காவல் நிலையத்தில் சிறுமி விஷம் அருந்தியது உண்மையல்ல - எஸ்.பி

2289பார்த்தது
ஆத்தூரில், காதல் விவகாரம் தொடர்பாக புகார் அளிக்க வந்த 17 வயது சிறுமி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், சேலம் எஸ்.பி. கூறுகையில், காவல் நிலையத்தில் சிறுமி விஷம் அருந்தியதாக வெளியான செய்திகள் தவறானவை. புகாரளிக்க வருவதற்கு முன்பே சிறுமி விஷம் அருந்திவிட்டு காவல் நிலையம் வந்து தெரிவித்ததாகவும், அதன் பேரில் போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி