சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 18,000 வளையல்கள் சாத்துபடி

1327பார்த்தது
தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு காசி, ராமேஸ்வர தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. கயிலை வாத்தியம் முழங்க, மங்கலப் பொருட்கள் ஆலய வலம் வந்து அம்மன் சன்னிதியில் வைக்கப்பட்டன. சிறப்பு தீபாராதனை பூஜைகள் மற்றும் வளையல்கள் சாத்துபடி செய்யப்பட்டது. பூஜையில் வைக்கப்பட்ட 18 ஆயிரம் வளையல்கள் மற்றும் திருமாங்கல்ய கயிறு பெண் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இதை பெண்கள் போட்டிபோட்டு முண்டியடித்து வாங்கினர்.