ஆத்தூர் திடீரென நின்ற கார் லாரி மோதி விபத்து 4 பேர் படுகாயம்

1பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் திடீரென நின்றதால், பின்னால் வந்த டாரஸ் லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நசுங்கியது. அருகில் இருந்தவர்கள் காரை உடைத்து காரில் இருந்த நால்வரையும் மீட்டனர். அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டிச் சென்றவர் காரை பின்னோக்கி இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி