ஆத்தூர் குடமுழுக்கு விழாவில் 5 பவுன் தாலிக்கொடி திருட்டு

0பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த வனராணி என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியை மர்ம நபர் திருடிச் சென்றார். இது குறித்து வனராணியின் கணவர் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.