ஆத்தூர் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்து விசாரணை

0பார்த்தது
ஆத்தூர் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்து விசாரணை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் ராமதாஸ் ஆதரவு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரான நடராஜன் அளித்த புகாரின் பேரில் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக, அன்புமணி ஆதரவு சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் என்பவரின் ஆதரவாளர்களான ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி