சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப் பகுதியில் நடைபெற்று வரும் அரசு வாக்காளர் நீக்கல், சேர்த்தல், சரிபார்த்தல் பணிகளை அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் திடீரென ஆய்வு செய்தார். முகவர்களிடம் வாக்காளர் சேர்க்கை, திருத்தம், இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது குறித்து அவர் கேட்டறிந்தார். ஆய்வின் போது தேர்தல் பொறுப்பாளர் திருவாற்காடு சீனிவாசன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.