நாளை திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிக்கை

995பார்த்தது
நாளை திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிக்கை
மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்தும், திட்டத்தை 30 நாட்களுக்கு குறைவாக செயல்படுத்தி வருவதாகவும், பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததை எதிர்த்தும் சேலம் புறநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு வரும் வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 13, 2026 அன்று காலை 10 மணிக்கு அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி