ஆத்தூர் ஆம்புலன்ஸ் விபத்து ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி பலி

5பார்த்தது
ஆத்தூர் ஆம்புலன்ஸ் விபத்து ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி பலி
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சௌந்தரராஜன், நோயாளியை சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மல்லியகரையில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். சிகிச்சை பெற்று வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சௌந்தரராஜன், 9 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது குறித்து மல்லியகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி