ஆத்தூர் டிராக்டர் மீது ஆம்புலன்ஸ் மோதிவிபத்து 5பேர் படுகாயம்

0பார்த்தது
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சௌந்தர் (26) மற்றும் திருச்சி மாவட்டம் முருங்கம்பட்டியைச் சேர்ந்த கங்காதரன் (26) உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சௌந்தர், ஸ்டாலின், ரகுநாத், கங்காதரன் உறவினர் செல்வி உட்பட ஏழு பேர் ஒரே ஆம்புலன்ஸில் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். கருத்துராஜபாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டர் மீது மோதி ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏழு பேரில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி