சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கொள்கை பரப்பு குழு செயலாளர் சபாபதி மோகன் பேசுகையில், "தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை பார்க்க கூட்டம் வருவார்கள், நாமினேஷன் தாக்கல் பண்ணும் போது 20 கார் வரும் ஆனால் தேர்தலில் பூத்தில் உட்காருவதற்கு ஆள் இருக்காது. ஒரு கட்சித் தலைவர் மாதிரி பேசுங்கள், கட்சி தொண்டர்களுக்கு கொள்கை என்றால் என்ன என பயிற்சி கொடுங்கள்" என விமர்சித்தார். மேலும், "தமிழ்நாடு என்றாலே பிரதமர் மோடிக்கு வெறுப்பு, ஓர வஞ்சனை" என்றும் சாடினார். தேர்தலுக்குள் புதிய கட்சி ஒன்று உருவாக உள்ளதாகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி தொடங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பழைய கூட்டணி கட்சியினர் 205 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெல்லும் என்றும் கூறினார். தொடர்ந்து, பல்வேறு கட்சிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.