சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிம்மம் நகராட்சிக்குட்பட்ட ஜெ ஜெ நகர் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வட்டார சங்கம் திறப்பு விழாவில் மாநில பொதுச் செயலாளர் பங்கேற்று சங்கத்தை திறந்து வைத்தார். வட்டார தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டவர்களுக்கு சாதி அறிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில், புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார செயலாளர் அல்லாபக்ஸ் நன்றி தெரிவித்தார்.