சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து கூட்டுக் குழு சங்கங்களின் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.