ஆத்தூர் டெங்கு பணியாளர்கள் நகராட்சி முன் தர்ணா

1பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 29 களப்பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும், வரும் மாதங்களில் தற்போது வழங்கப்படும் 300 ரூபாய் சம்பளத்தை 250 ரூபாயாகக் குறைக்க இருப்பதாகவும் குற்றம் சாட்டி, அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் மற்றும் நகரச் செயலாளர் வேல்முருகன், களப்பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை மனுவாக எழுதித் தர அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி