சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அண்ணாதுரை, கடந்த 24ஆம் தேதி மதுபோதையில் சாக்கடையில் தவறி விழுந்து காயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு தம்மம்பட்டி தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மல்லிகரை போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.