சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தக்காளி முதல் மாங்காய் வரை பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தக்காளி விலை ரூ. 32 முதல் ரூ. 25 வரை, உருளைக்கிழங்கு ரூ. 50 மற்றும் ரூ. 34, சின்ன வெங்காயம் ரூ. 40 மற்றும் ரூ. 35, பெரிய வெங்காயம் ரூ. 45 என விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் ரூ. 180, தேங்காய் ரூ. 60-55, கேரட் ரூ. 70, பீட்ரூட் ரூ. 50, மாங்காய் ரூ. 80-70-30 என விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.